Posts

ஊடல் கொண்டேன்... உன்னிடமே சரணடைந்தேன்

"காலையில் தேநீருக்குப் பதிலாக...தேன் முத்தம் கொடுத்து   உன்னை நான் எழுப்ப...   நீயோ,எழும்பாமல் என்னை உன்னிடம் பிடித்து இழுக்க...   என் சமையல் உன் நாவால் ருசிக்கப்படும்முன்னே,   உன் உதடுகளில்..என் உதடுகள் பயணம் செய்ய...   என் இதழ்கள் உன் நெற்றியில் பதியும் வரை...   நீ வேலைக்குச் சென்ற பிறகும், உன்னைச் சுற்றியே   என் மனம் உலாவுகிறதே...   என்னை என்ன செய்தாய்...   என் அன்பே, நீ என்ன செய்தாய்...?   இரவு வேலை முடிந்து களைத்து வரும் உனக்கு,   என் மடிமீது தொட்டில் கட்டி, தாய்க்குப் பின் தாரமாய்,   உன்னை உறங்க வைக்க ஆசை...   சமைத்த உணவை விட,   உன் சிரிப்பில்தான் என் பசி  தீர்ந்துவிடுகிறது...   உன் இதயத் துடிப்பை  தாலாட்டாய் கேட்டபடி,   உன் அணைப்பிற்குள் உலகமே மறந்து உறங்கிட   ஆசை...   இவ்வளவு ஆசைகளையும் என் மனதில் விதைத்துவிட்டு...   என்னை...   என்ன செய்தாய்   என் அன்பே...? "  காதல் என்பது பெரிய தருணங்களில் மட்டுமல்ல — காலை முத்தத்தில், உன் சிரிப்பில், உன் அணைப்பில், உன் ...

மிதமாக வலிக்கிறதா ... உன் மனதோரம்...?

⚠️ Trigger Warning:  இந்த கவிதை பெண்களின் வலியை, சமூக அநீதியை, உடல் வன்முறையை உள்ளடக்கியது. கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை, சமூக ஒடுக்குமுறை — இவற்றை   நேரடியாக எதிர்கொண்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் வலிக்கலாம். உங்கள் மனநிலையை கவனித்துக்கொண்டு படிக்கவும். உணர்வுபூர்வமான வாசகர்கள் கவனமாக படிக்கவும்.  இரவு உறங்கும் நேரத்தில் சீண்டியது எனது பொம்மை.... பதறி எழுந்தேன். "என்னைக் கண்டு சிரித்தது ஏன்?" என்று கேட்டேன். "நீ பதறும் அளவு நான் மானிடன் அல்ல... உன்னைச் சிதைத்து உன் வாழ்வை சீரழிப்பதற்கு..." என்றது. "மிகவும் புத்திசாலியாகப் பேசுகிறாயே...! உனக்குப் ' பெண் ' என்று பெயர் சூட்டவா?" என்று கேட்டதற்கு, என் சுதந்திர வாழ்வை முடக்கி, அடுப்பங்கரையில் அடைக்கப்பட்டு, கட்டாயத் திருமணத்தின் பெயரில், என் கனவுகள் புதைக்கப்பட்டு, என் விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டு, என் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்கும் உலகில் என்னை ' பெண் ' என்று அழைக்கிறாயே..."என்றது. இவையெல்லாம் உண்மைதானா என்று அசைபோட்டுக்கொண்டே நடந்துச் சென்றபோது, திடீரென்று... ஒருவன் என்னை இழ...

அவள்

  முத்தவளாய் பிறந்தவள்,   தன் உதிரத்தை என்னுடன் பகிர்ந்தவள்,   என்னைத் தொந்தரவு செய்யப் பிறந்தவள்,   என்மேல் பாசம் காட்டப் பிறந்தவள்,   என்மேல் அன்பு செலுத்தப் பிறந்தவள்.                                     என,   பல விதத்தில் அவளைச் சொன்னாலும்,   ஒரு மூன்றெழுத்து வார்த்தையில் இவை அனைத்தும்   அடங்கி விடும் என்பது ஆச்சரியம் தருகிறது.   எனக்கு அக்காவாய் பிறந்த அவள்,   இப்போது என்னைத் தாயைப் போல் பார்த்துக் கொள்கிறாள்.   சிறு வயதில்,   என் கையைப் பிடித்து நடந்தவள்;   இன்று,   என் வாழ்க்கையைப் பிடித்து நடத்துகிறாள்.    நான் சோர்ந்து நிற்கும் நேரங்களில்,   எனக்குத் தோளாய் நிற்கிறாள்;   நான் உடைந்து போகும் தருணங்களில்,   எனக்குத் துணிவாய் மாறுகிறாள்.   என் கண்ணீரின் மொழியை   வார்த்தைகளின்றி புரிந்துகொள்கிறாள்;   என் புன்னகையின் பின்னாலுள்ள வலியையும்   எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறாள். ...

நண்பியே .....காதலியாவாயா ?

  கல்லூரியில் உன்னைச் சந்தித்தேன், என் தோழியானாய். என் கல்லூரி வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்தாயே  !! முதலில் என்னுடன் பேசத் தயங்கியவள்,  பிறகு நன்றாகப் பேசினாய்.  உன் வாழ்க்கையையும் நினைவுகளையும் அலைபேசியில் என்னுடன் பகிர்ந்தாயே  !! நேரில் பார்த்து என்னுடன் பேசத் தயங்கினாயே, ஆனால்  இன்று , நாம் சந்திக்காமல் கழியும் நேரங்களே இல்லாமல் போனதே  !!   அப்போது வரை உயிர்த்தோழியாய் இருந்தாய், பிறகு என் உயிர் நண்பியாய் பதவி உயர்வு பெற்றாயே  !! கோபக்காரனான என்னை உன் பார்வையாலே அடக்கினாயே; உன் ஒற்றைப் பார்வைக்கு அவ்வளவு சக்தியா  !! கஷ்டங்கள் பல என்னைச் சூழ்ந்தபோது என்னுடன் இருந்தாய் உன்னுடன் இருந்தபோது என் கஷ்டங்களும் பறக்கிறதே  !! தாயைப் போல என்னைப் பார்த்துக்கொள்கிறாய், உன்னில் என் தாயைக் காண்கிறேனே  !! என் வாழ்க்கை முடிவுகளில் பங்கெடுத்தாய்; தற்போது என் வாழ்க்கையே உன்னதானதே  !! என் வாழ்க்கையின் முக்கியமான அங்கமானாய்; என் தினசரி வாழ்க்கை நீ இன்றி வெறுமையானதே  !! இவ்வாறு என் வாழ்க்கையில் கலந்த நீ, என் காதலியாவாயா ...!! ❤️✨ காதல்...

அழகான நினைவாய் நீ.....

" உன்னை நான் விட்டுச் சென்றேன்,    காயப்படுத்தினேன்.    ஆனால் இன்று,    நீ இல்லாமல் என் நாட்கள் நகரவில்லை.    உன் அன்பின் அருமை,    நீ விலகிய பிறகுதான் புரிந்தது.    அருகில் இருந்தபோது கவனிக்காத இதயம்,    இன்று உன் நினைவில் தவிக்கிறது.    உன் மடியில் கிடைத்த ஆறுதல்,    உன் வார்த்தைகளில் இருந்த அன்பு    அனைத்தும் இன்று    என் நினைவுகளில் மட்டும் வாழ்கின்றன.    நீ உடன் இருக்கும்போது    உன்னை மதிக்காத நான்,    உன்னை பொக்கிஷமாகப் பாதுகாத்திருக்க வேண்டும் என்று    உணர்ந்த நேரத்தில்,    நீ என்னிடம் இல்லை.    சில பிரிவுகள் மறக்க முடியாதவை,    சில காதல்கள் திரும்ப வராதவை.    நீயோ...    என் வாழ்க்கையில் கிடைத்தும்    கைநழுவிப் போன    ஓர் அழகான நினைவு...! 🖤✨ "     ---------------------------------------------------------------------------- காதல் என்பது எப்போதும் இறுதிவ...