ஊடல் கொண்டேன்... உன்னிடமே சரணடைந்தேன்


"காலையில் தேநீருக்குப் பதிலாக...தேன் முத்தம் கொடுத்து
  உன்னை நான் எழுப்ப...
  நீயோ,எழும்பாமல் என்னை உன்னிடம் பிடித்து இழுக்க...
  என் சமையல் உன் நாவால் ருசிக்கப்படும்முன்னே,
  உன் உதடுகளில்..என் உதடுகள் பயணம் செய்ய...
  என் இதழ்கள் உன் நெற்றியில் பதியும் வரை...
  நீ வேலைக்குச் சென்ற பிறகும், உன்னைச் சுற்றியே
  என் மனம் உலாவுகிறதே...
  என்னை என்ன செய்தாய்...
  என் அன்பே, நீ என்ன செய்தாய்...?
  இரவு வேலை முடிந்து களைத்து வரும் உனக்கு,
  என் மடிமீது தொட்டில் கட்டி, தாய்க்குப் பின் தாரமாய்,
  உன்னை உறங்க வைக்க ஆசை...
  சமைத்த உணவை விட,
  உன் சிரிப்பில்தான் என் பசி  தீர்ந்துவிடுகிறது...
  உன் இதயத் துடிப்பை  தாலாட்டாய் கேட்டபடி,
  உன் அணைப்பிற்குள் உலகமே மறந்து உறங்கிட
  ஆசை...
  இவ்வளவு ஆசைகளையும் என் மனதில் விதைத்துவிட்டு...
  என்னை...
  என்ன செய்தாய்
  என் அன்பே...? " 

காதல் என்பது பெரிய தருணங்களில் மட்டுமல்ல — காலை முத்தத்தில், உன் சிரிப்பில், உன் அணைப்பில், உன் இதயத் துடிப்பில் கூட வாழ்கிறது. சமைத்த உணவை விட உன் புன்னகை போதும் என்று சொல்லும் மனசு தான் உண்மையான காதலின் அடையாளம்.
காதலித்தால் இப்படித்தான் இருக்கும் — தூரத்திலும் நெருக்கமாய், அமைதியிலும் நிறைவாய், இரவிலும் பாதுகாப்பாய். உன்னை என்னவளாக்கிவிட்டதே... என்னை என்ன செய்தாய் என் அன்பே. 🖤🥀✨


💬 உங்கள் காதலரின் எந்த சின்னச் சின்ன செயல் உங்களை உருக்குகிறது? Comment-ல் சொல்லுங்க 🖤

இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தைத் தொட்டிருந்தால்,
Instagram-ல் follow பண்ணுங்க 🖤
@hearts._.in._.harmony
— உணர்வுகளை வார்த்தைகளாக்கும் இடம் ✨🥀

Comments

Anonymous said…
😍
Majaa vaa irukku💗❤️‍🔥

Popular posts from this blog

மிதமாக வலிக்கிறதா ... உன் மனதோரம்...?

அழகான நினைவாய் நீ.....

நண்பியே .....காதலியாவாயா ?