நண்பியே .....காதலியாவாயா ?

 


கல்லூரியில் உன்னைச் சந்தித்தேன், என் தோழியானாய்.

என் கல்லூரி வாழ்க்கையை ஒளிமயமாக்க வந்தாயே  !!

முதலில் என்னுடன் பேசத் தயங்கியவள்,  பிறகு நன்றாகப் பேசினாய். 

உன் வாழ்க்கையையும் நினைவுகளையும் அலைபேசியில் என்னுடன் பகிர்ந்தாயே  !!

நேரில் பார்த்து என்னுடன் பேசத் தயங்கினாயே, ஆனால் இன்று , நாம் சந்திக்காமல் கழியும் நேரங்களே இல்லாமல் போனதே  !!  

அப்போது வரை உயிர்த்தோழியாய் இருந்தாய்,

பிறகு என் உயிர் நண்பியாய் பதவி உயர்வு பெற்றாயே  !!

கோபக்காரனான என்னை உன் பார்வையாலே அடக்கினாயே;

உன் ஒற்றைப் பார்வைக்கு அவ்வளவு சக்தியா  !!

கஷ்டங்கள் பல என்னைச் சூழ்ந்தபோது என்னுடன் இருந்தாய்

உன்னுடன் இருந்தபோது என் கஷ்டங்களும் பறக்கிறதே  !!

தாயைப் போல என்னைப் பார்த்துக்கொள்கிறாய்,

உன்னில் என் தாயைக் காண்கிறேனே  !!

என் வாழ்க்கை முடிவுகளில் பங்கெடுத்தாய்;

தற்போது என் வாழ்க்கையே உன்னதானதே  !!

என் வாழ்க்கையின் முக்கியமான அங்கமானாய்;

என் தினசரி வாழ்க்கை நீ இன்றி வெறுமையானதே  !!

இவ்வாறு என் வாழ்க்கையில் கலந்த நீ,

என் காதலியாவாயா ...!! ❤️✨


காதல் என்பது ஒருவரை சொந்தமாக்கிக் கொள்வது அல்ல; அவர்களின் இருப்பால் நம் வாழ்க்கை அழகடைந்ததை உணர்வதே காதல். சிலர் நம் வாழ்வில் ஒரு சிறிய காலம் மட்டுமே இருப்பார்கள், ஆனால் அவர்கள் தந்த அன்பும் மகிழ்ச்சியும் ஒரு வாழ்நாள் முழுவதும் நம்மை புன்னகைக்க வைக்கும் . வாழ்க்கையில் கிடைக்கும் எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. சில காதல்கள் அழகான நினைவுகளாகவும், சிலர் இனிய உணர்வுகளாகவும் நம் இதயத்தில் நிலைத்துவிடுகின்றனர். அவர்களை நினைக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் மலரும் புன்னகையே அந்தக் காதலின் வெற்றி. 



💬 உங்கள் வாழ்க்கையிலும் இப்படி ஒரு தோழி காதலியானாளா? Comment-ல சொல்லுங்க...
இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தைத் தொட்டிருந்தால்,
Instagram-ல் follow பண்ணுங்க 🖤
@hearts._.in._.harmony
— உணர்வுகளை வார்த்தைகளாக்கும் இடம் ✨🥀

Comments

Nandhithaa said…
blastu blastu 💥
Anonymous said…
❤️✨🫠
Anonymous said…
🫠🫠🫠

Popular posts from this blog

மிதமாக வலிக்கிறதா ... உன் மனதோரம்...?

அழகான நினைவாய் நீ.....