பணமில்லா புன்னகை.


வறுமை... அது வெறும்
பணமின்மை அல்ல...
பசியோடு விழித்துக் கொண்டு, நம்பிக்கையோடு உறங்கும்
ஆயிரம் உயிர்களின் வாழ்க்கை.
காலியான தட்டு...கிழிந்த ஆடை...ஒழுகும் கூரை...
இவை அவர்களின் அடையாளம் அல்ல...
சூழ்நிலை மட்டுமே.
வெறும் கைகளில்   பணம் இல்லாமல் இருக்கலாம்...
ஆனால், அதே கைகளில் உழைப்பும் இருக்கிறது...
ஒருநாள் வாழ்க்கையை மாற்றும்
நம்பிக்கையும் இருக்கிறது...
பிள்ளைகள்
பசியை உணரக் கூடாது என்பதற்காக,
பெற்றோர்கள்  தங்கள் வலிகளை புன்னகைக்குள் மறைத்தார்கள்.
அதுதான்...
பணமில்லா புன்னகை.
சில புன்னகைகள்  மகிழ்ச்சியால் பிறப்பதில்லை...
குடும்பத்தை  உடைந்துபோக விடக்கூடாது
என்ற பொறுப்பால் பிறக்கின்றன.
வறுமை  ஒரு மனிதனின் மதிப்பை ஒருபோதும் தீர்மானிப்பதில்லை...
ஏனெனில்,
இன்று வெறுமையாகத் தெரியும்  அந்தக் கைகள்தான்...
நாளை, உலகமே கைதட்டும்
சாதனைகளை   படைக்கக்கூடும்.

வறுமை என்பது ஒரு மனிதனின் தோல்வி அல்ல — அது வாழ்க்கை அவனுக்கு கொடுத்த சவால். பணம் இல்லாதவன் என்று யாரும் தலை குனிய வேண்டியதில்லை. ஏனென்றால், உலகின் மிகப்பெரிய வெற்றிகளுக்கு பின்னால் காலியான தட்டுகளும், கண்ணீரில் நனைந்த தலையணைகளும் இருக்கின்றன. ஒரு தந்தையின் புன்னகை பின்னால் எத்தனை வலிகள் மறைந்திருக்கின்றன என்று தெரியுமா? ஒரு தாயின் "பரவாயில்லை" என்ற வார்த்தைக்கு பின்னால் எத்தனை தியாகங்கள் ஒளிந்திருக்கின்றன என்று தெரியுமா? அந்த கைகளுக்கு வணக்கம். அந்த புன்னகைகளுக்கு நன்றி. 🖤🥀✨


💬 உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு புன்னகை கண்டிருக்கீங்களா? Comment-ல சொல்லுங்க 🖤

இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தைத் தொட்டிருந்தால்,
Instagram-ல் follow பண்ணுங்க 🖤
@hearts._.in._.harmony
— உணர்வுகளை வார்த்தைகளாக்கும் இடம் ✨🥀

Comments

New idea different ah hit agudhu ❤️
Anonymous said…
👍

Popular posts from this blog

மிதமாக வலிக்கிறதா ... உன் மனதோரம்...?

அழகான நினைவாய் நீ.....

நண்பியே .....காதலியாவாயா ?